ரெயில் பயணத்தில் விரைவில் புதிய மாற்றம்.. 24 மணி நேரத்திற்கு முன் பயணிகளின் பயண பட்டியல்


ரெயில் பயணத்தில் விரைவில் புதிய மாற்றம்.. 24 மணி நேரத்திற்கு முன் பயணிகளின் பயண பட்டியல்
x

பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல், தற்போது ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டு வருகிறது.

சென்னை,

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை ரெயில்வே நிர்வாகம் தற்போது ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டு வருகிறது. இதனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள், ரெயில்களை பிடிக்க தொலைதூரத்தில் இருந்து வரும் பயணிகள் ரெயில்வே இறுதிப்பட்டியல் வெளியிடும் வரை தங்கள் டிக்கெட் நிலை குறித்து தெரியாமல் உள்ளனர்.

ரெயில் பயணிகளிடையே நிலவும் பதற்றத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பயணிகளுக்கு விரைந்து தகவல் செல்லும் வகையிலும் ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகளுடன் கூடிய பயணிகள் அட்டவணைகளை வெளியிடுவதற்கான வழிமுறையை ரெயில்வே உருவாக்கி வருகிறது.

இந்த நடைமுறை தற்போது ராஜஸ்தானில் கடந்த 6-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story