தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குனர் பொறுப்பேற்பு

புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் அனூப், கடந்த 2008-ம் ஆண்டு இந்திய விமான ஆணையத்தில் பணியில் சேர்ந்தார்.
தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மைசூரு விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ஜே.ஆர்.அனூப், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் அனூப், கடந்த 2008-ம் ஆண்டு இந்திய விமான ஆணையத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து கோவா, கோழிக்கோடு, ஜம்மு-காஷ்மீர், திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களில் இயக்க பிரிவுகளிலும், புதுடெல்லி இந்திய விமான ஆணைய தலைமை அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார்.
அதன்பிறகு மைசூர் விமான நிலைய இயக்குனராக பணியாற்றிய நிலையில் தற்போது தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






