காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதி

காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதி
Published on

மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற முடியும். இன்று (புதன்கிழமை) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட காரைக்கால் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களில் வர உள்ள இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் தராது. காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்று குறித்த பிரச்சினைகளை தீர்க்க மட்டுமே உதவும்.

இந்த தகவலை திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆர்.அனந்த் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com