புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராணிப்பேட்டை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரமணன் (வயது 66). இவரது மகள் ஈஸ்வரி (33). இவருக்கும், பாண்டியன் என்பவருக்கும் 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். ஆடி மாதம் என்பதால் தனது தாய் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்வரி நேற்று தனது தாய் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com