அயனாவரத்தில் ரூ.42 லட்சத்தில் புதிய உடற்பயிற்சி கூடம்: எம்பி தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டினார்

இந்நிகழ்வில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அயனாவரத்தில் ரூ.42 லட்சத்தில் புதிய உடற்பயிற்சி கூடம்: எம்பி தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டினார்
எம்பி தயாநிதி மாறன்
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், அயனாவரம், கலைஞர் கருணாநிதி நகர் 10 ஆவது தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்

சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-98க்குட்பட்ட அயனாவரம், கலைஞர் கருணாநிதி நகர் 10ஆவது தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு இன்று (26.10.2026) அடிக்கல் நாட்டினார்.

மேயர் பிரியா

இந்த உடற்பயிற்சி கூடமானது நவீன உடற்பயிற்சி சாதனங்களுடன், 812 சதுர அடி பரப்பளவில் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இந்நிகழ்வில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com