அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதி: அமைச்சர் நிர்மல்குமார் அடிக்கல் நாட்டினார்

240 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 24.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக்கட்டிடம்.
240 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 24.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டடம்.
Published on

சென்னை,

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சரும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில், 240 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 24.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் நீதியரசர் (ஓய்வு) வி. பாரதிதாசன், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் குழுவின் உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் எம். பிரகாஷ், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் முனைவர் கௌரி ரமேஷ், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com