ராயபுரத்தில் ரூ.79 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டடம்: அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் திறந்து வைத்தனர்

அமைச்சர்கள் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தனர்.
பல்நோக்கு கட்டடம்: அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் திறந்து வைத்தனர்
அமைச்சர் வெங்கடரமணன்
Published on: 

சென்னை,

ராயபுரத்தில் ரூ.79 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டடத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் திறந்து வைத்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

நியாய விலை கடை திறப்பு

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்,கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், இராயபுரம் மண்டலத்தில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினையும் அதில் அமைந்துள்ள நியாய விலை கடையினையும் இன்று திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

புதிய குடும்ப அட்டைகள்

இன்று உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட ஐசக் தெருவில் மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினை திறந்து வைத்து, அதில் அமைந்துள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும், 10 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினர்.

ஆய்வு

இந்த பல்நோக்கு கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 673 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் நியாய விலை கடையும், முதல் தளத்தில் மாநகராட்சி அலுவலக கட்டடமும் அமைந்துள்ளது. அமைச்சர்கள் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தர்ப்பகராஜ், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மண்டல அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X