மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது
மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாகவே வேகமாக பரவி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,133 ஆக இருந்தது.

இந்நிலையில் மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,403 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com