புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு - கால வரையற்ற போராட்ட அறிவிப்பு வாபஸ்

முதல்-அமைச்சரின் ஓய்வூதியத் திட்ட அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு இனிப்பு வழங்கி, அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், "23 ஆண்டு கால ஓய்வூதியம் இல்லாத நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் எதிர்பார்த்தது போன்று வழங்கியமைக்கு முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
முதல்-அமைச்சரின் அறிவிப்பை ஜாக்டோ ஜியோ அமைப்பு பெருமகிழ்வோடு வரவேற்று நன்றி தெரிவிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தனர். மேலும் ஜனவரி 6-ந்தேதி முதல் நடக்க இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.






