நெல்லைக்கு புதிய மோப்ப நாய் குட்டி ப்ரௌனி வருகை: போலீஸ் கமிஷனர் பெயர் சூட்டினார்

நெல்லை மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது ரெமோ, கூப்பர், பரணி, லக்கி என 4 மோப்ப நாய்கள் பணியில் உள்ளது.
நெல்லைக்கு புதிய மோப்ப நாய் குட்டி ப்ரௌனி வருகை: போலீஸ் கமிஷனர் பெயர் சூட்டினார்
Published on

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் பணியில் ரெமோ, கூப்பர் என 2 மோப்ப நாய்கள், குற்ற வழக்குகளை துப்பறியும் பணியில் பரணி என 1 மோப்ப நாய் போதை பொருட்கள் துப்பறியும் பணியில் லக்கி என 1 மோப்ப நாய் என மொத்தம் 4 மோப்ப நாய்கள் பணியில் உள்ளது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு குற்ற வழக்குகளை துப்பறியும் அலுவலுக்காக புதிதாக நாய் குட்டி ஓன்று வாங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று (26.3.2026) புதிதாக வாங்கப்பட்ட அந்த நாய் குட்டிக்கு ப்ரௌனி (Brownie) என பெயர் சூட்டினார். மேலும் மோப்ப நாய்களை நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், நல்ல முறையில் பராமரிக்கவும் மோப்ப நாய் பிரிவு காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) விஜயகுமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com