

சென்னை,
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நேரலை செய்வதற்காக, 2 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நேரலை செய்யப்பட்டது. சட்டமன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போன்கள் வாயிலாக நேரடியாகக் காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, வருங்காலத்திலும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக 2027-ம் ஆண்டு ஜனவரி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் வரை, 2 ஆண்டுகளுக்கு சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தற்போது டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் சட்டமன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் நேரடியாகக் காணும் வசதி தொடர உள்ளது.