புதிய டிரான்ஸ்பார்மர்

தில்லையம்பூர் ஊராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மரை அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதிய டிரான்ஸ்பார்மர்
Published on

திருவிடைமருதூர்,

கும்பகோணம் தொகுதி, தில்லையம்பூர் ஊராட்சி, ஆண்டித் தோப்பு பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, அதே பகுதியில், அன்பழகன் எம்.எல்.ஏ. முயற்சியில், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெ.சுதாகர், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி டி.என்.கரிகாலன், ஊராட்சி துணைத் தலைவர் என்.ஆனந்தன், மின்சார வாரிய செயற்பொறியாளர் கலையரசி, உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com