திருவண்ணாமலையில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமாப்பிள்ளை

மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமாப் பிள்ளையை பொதுமக்கள் பாராட்டினர்.
திருவண்ணாமலையில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமாப்பிள்ளை
Published on

திருவண்ணாமலை,

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் திருவண்ணாமலையில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த வகையில் திருவண்ணாமலை வேங்கிக் காலை சேர்ந்த டாக்டர் அரவிந்தன் என்பவருக்கு தேனி மாவட் டத்தை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி என்பவருடன் நேற்று திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

டாக்டர் அரவிந்தன் திருமணம் முடிந்த கையோடு மணமகளுடன் தனது ஜனநாயக கடமையை செய்வதற்காக திருவண்ணாமலை வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்தில் வந்து வாக்குப்பதிவு செய்தார். மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமாப்பிள்ளையை பொதுமக்கள் பாராட்டினர். தொடர்ந்து அவர், அவரது மனைவியை அழைத்து தேனி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com