மத்திய பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு பயிலரங்கம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு பயிலரங்கம் நடந்தது.
மத்திய பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு பயிலரங்கம்
Published on

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடைபெறும் மொழிபெயர்ப்பு பயிலரங்கத்தின் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மொழிபெயர்ப்பு குறித்து பேசினார்.பயிலரங்கத்தின் நோக்கம் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக ராபர்ட் கால்டுவெல் தமிழ் இருக்கையின் பேராசிரியர் நடராஜர் பிள்ளை பேசினார். இதில் மாணவர் நல பேராசிரியர் செல்வம், தகவல் தொடர்பு துறைய பேராசிரியர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர். முன்னதாக மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ரமேஷ் வரவேற்றார். முடிவில்பேராசிரியர் ஜவகர் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com