தொடர் மழை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வேறொரு தேதியில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர் மழை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

சென்னை,

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இரவு தாண்டியும் மழை நீடித்த நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் மழை எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வேறொரு தேதியில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com