

கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகியவற்றில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்ததால் பணி நீக்கம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம்-2 வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.