அமோனியா கசிவு காரணமாக உயிரிழப்பு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா கசிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக விசாரிக்கிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து, ஊழியர்கள் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. விபத்தின்போது ஊழியர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, அருகிலுள்ள அறையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்த செய்தி உண்மையெனில், இது கடுமையான மனித உரிமை மீறல் என்று ஆணையம் கருதுகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அறிக்கை

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்நிலை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி உள்ளிட்ட விபரங்கள் இந்த அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஊடக செய்திகளின்படி, விபத்து நடந்தவுடன் சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 59 ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com