கொக்கைன் விற்பனை செய்த நைஜீரிய பெண் கைது: ஒரே வழக்கில் சிக்கிய 25 பேர்

இந்த வழக்கில் ஏற்கனவே நைஜீரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கைன் விற்பனை செய்த நைஜீரிய பெண் கைது: ஒரே வழக்கில் சிக்கிய 25 பேர்
Published on

சென்னை,

கொகைன் போதைப்பொருளை கடத்திய கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் தொடர்ந்து வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி 25-ந்தேதி பயாஸ் அகமது என்பவர் முதலாவதாக கைது செய்யப்பட்டார்.

அவரை தொடர்ந்து அடுத்தடுத்து 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த ஒரே வழக்கில் இதுவரை 24 பேர் கைதாகி இருக்கிறார்கள்.

தற்போது 25-வது நபராக நேற்று முன்தினம் பெங்களூரை சேர்ந்த சாரா குமாமா (வயது 41) என்ற நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்துவந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே நைஜீரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கைது வேட்டை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com