கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இன்றும், நாளையும் இரவு நேர போக்குவரத்துக்கு தடை

2 நாட்கள் இரவு நேரத்தில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

கோவை-அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,750 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டினார்.

இந்த மேம்பாலத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்காக இரவு நேரத்திலும் வாகனங்களின் பதிவு எண்கள் மற்றும் வேகத்தை கண்டறியும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. எனவே மேற்கண்ட 2 நாட்கள் இரவு நேரத்தில் இந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. எனவே 2 நாட்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. பகல் நேரத்தில் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com