நீலகிரி மலை ரெயில் சேவை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரெயில் சேவை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
Published on

கோவை,

நீலகிரி மலை ரெயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் பயணம் செய்து அங்குள்ள இயற்கை சூழலை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக நீலகிரி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com