நீலகிரி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க கோர்ட் பரிந்துரைத்தது.
நீலகிரி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் சின்னு (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சின்னுடையே சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் உறவினர்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது

இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சின்னு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சின்னுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதன்படி குற்றம் சாட்டப்பட்ட சின்னு மீது சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமார் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து சின்னு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com