நீலகிரி: கோத்தகிரியில் உலா வந்த கரடியால் மக்கள் அச்சம்

கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: கோத்தகிரியில் உலா வந்த கரடியால் மக்கள் அச்சம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கரடி உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பணிக்கு சென்று வீடு திரும்பும் தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

எனவே, கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விடவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com