நீலகிரி: கொட்டும் மழையில் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி


நீலகிரி: கொட்டும் மழையில் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி
x

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார்.

நீலகிரி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் ராகுல் காந்தி உரையாற்றினார். பின்னர், பள்ளி மாணவ, மாணவியருடன் ராகுல் காந்தி உரையாடி வருகிறார்.

நிகழ்ச்சி நடைபெறும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனாலும், கொட்டும் மழையில் நனைந்தபடி ராகுல் காந்தி மாணவ, மாணவியருடன் உரையாடி வருகிறார். மாணவ, மாணவியர் கேட்கும் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்து வருகிறார்.

பள்ளி மாணவ, மாணவியருடன் உரையாடியப்பின்னர் பள்ளிக்கு அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார்.

1 More update

Next Story