நீலகிரி: முதுமலை சாலையில் உலா வந்த புலி- வாகன ஓட்டிகள் பீதி

அதே சமயத்தில், சாலையின் மறுபுறத்திலிருந்து மயில் ஒன்றும் சாலையைக் கடந்து சென்றது.
நீலகிரி: முதுமலை சாலையில் உலா வந்த புலி- வாகன ஓட்டிகள் பீதி
புலி- மயில்
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் வனப்பகுதி சாலையில், புலி ஒன்று சாலையோரத்தில் தண்ணீர் குடித்துவிட்டு கம்பீரமாக சாலையைக் கடந்து சென்ற காட்சி சுற்றுலா பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சாலையோரத்தில் தாகம் தணித்த புலி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மசினகுடி, மாயார் வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) உதகையிலிருந்து முதுமலை செல்லும் வனப்பகுதி சாலையின் ஓரத்தில் தேங்கியிருந்த நீரில், புலி ஒன்று எந்தவித அச்சமும் இன்றி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது.

புலியுடன் சாலையைக் கடந்த மயில்

அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் சாலையோரத்தில் நின்றிருந்த புலியைக் கண்டு பீதியடைந்தும், வியந்தும் தங்கள் வாகனங்களை சற்றுத் தொலைவிலேயே நிறுத்தினர். தண்ணீர் குடித்து முடித்த அந்த புலி, மெதுவாக நடந்து சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

அதே சமயத்தில், சாலையின் மறுபுறத்திலிருந்து மயில் ஒன்றும் சாலையைக் கடந்து சென்றது. புலி மற்றும் மயில் ஆகிய 2 தேசியச் சின்னங்களும் ஒரே நேரத்தில் சாலையைக் கடந்து சென்ற இந்த அரிய காட்சியைப் பயணிகள் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

வனத்துறையினர் அறிவுறுத்தல்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இதனிடையே, வனப்பகுதி சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளைக் கண்டால் வாகனங்களை விட்டு கீழே இறங்கக் கூடாது என்றும், ஒலிப்பான் அடிப்பதையோ அல்லது கேமரா பிளாஷ் பயன்படுத்துவதையோ தவிர்த்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

X