இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து கைது செய்தனர்.
சிறை
Published on

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்தனர்.

மீனவர்கள்

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் சென்று இருந்தனர்.

நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். விசைப்படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து கைது செய்தனர். மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கைது

5 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகின் என்ஜின் பழுதாகி, இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியதால் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் மீண்டும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்தது ராமேசுவரம் மீனவர்களை வேதனை அடையச்செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com