பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை - தவெக தலைவர் விஜய்


பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை - தவெக தலைவர் விஜய்
x
தினத்தந்தி 4 July 2025 2:15 PM IST (Updated: 4 July 2025 4:13 PM IST)
t-max-icont-min-icon

தவெக தலைமையில்தான் கூட்டணி என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.

செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,

தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை. தவெக தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும். மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது.

என்றார்.

1 More update

Next Story