

சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றன.
அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.26 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.