சூரியனை எந்த கையும் மறைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சூரியனை எந்த கையும் மறைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
Published on

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சொல்லாததையும் செய்து இன்ப அதிர்ச்சி தருபவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை நிரூபித்து விட்டார். மகளிருக்கு, பொங்கல் பரிசுத்தொகையோடு சேர்த்து கடந்த மாதம் ரூ,4000 கிடைத்தது. மகளிருக்கு அரசு கொடுத்த பணம் டாஸ்மாக்குக்கு வரவில்லை.

இந்த மாதம் மகளிருக்கு சிறப்பு தொகுப்போடு சேர்த்து ரூ.5,000 கிடைத்துள்ளது. திமுக அரசை போன்று பாஜக ஆளும் மாநிலங்களிலும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வாயை முதல்-அமைச்சர் தைத்து விட்டார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அதுபோல சூரியனை எந்த கையும் மறைக்க முடியாது என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com