எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Published on

திருச்சி,

திருச்சி பாத்திமாபுதூரில் குழந்தை சுஜித்தின் கல்லறையில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது. குறைசொல்வதை விட இதை பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இறப்பில் கூட அரசியல் செய்வது திமுகவும், ஸ்டாலினும் மட்டுமே. குழந்தையை மீட்கும் நேரத்தில் கடவுளை பற்றியும் மரணத்தை பற்றியும் குறை சொல்வது தவறான விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com