

சென்னை,
தமிழகத்தில் பொதுமக்கள் அலையாமல், வீட்டிலிருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ திட்டம் 1 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழக பதிவுத்துறையில் இடைத்தரகர்கள் நடமாட்டத்தை தவிர்க்கவும், பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 17-ஆம் தேதி தமிழக முதல்-அமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக, புதிய மனை பிரிவுகளின் முதல் விற்பனை மற்றும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆகிய இரண்டு வகை ஆவணங்களுக்கு இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டது.
இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"வருகையில்லா ஆவணப் பதிவுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆகஸ்டு 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான கடந்த 44 நாட்களில் மட்டும் மொத்தம் 1,00,134 ஆவணங்கள் இந்த முறையில் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.