

தூத்துக்குடி,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் துறையின் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மீட்பு உபகரணங்களை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்களைப் பாதுகாத்து மீட்கும் வகையில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறையின் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மீட்பு உபகரணங்களை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் இன்று மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு விரைந்து உதவிடவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென பேரிடர் மீட்புப் படையினருக்கு எஸ்.பி. அறிவுரைகள் வழங்கினார்.