வடகிழக்குப் பருவமழை: சென்னையில் ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர்செய்யும் பணி

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் பள்ளங்களை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழை: சென்னையில் ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர்செய்யும் பணி
Published on: 

சென்னை,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், மண்டலம் 1 முதல் 15 வரையிலான சாலைகளில் உள்ள பள்ளங்களை கான்கிரீட் கலவை மற்றும் தார் கலவைகளைக் கொண்டு சீர்செய்யும் பணிக்காக பேருந்து சாலைகளில் ரூ.9.25 கோடி மற்றும் உட்புறச் சாலைகளில் ரூ.12.55 கோடி என மொத்தம் ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் பள்ளங்களை சீர்செய்யும் பணிகள் (Road Patch Works) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள சாலைகளில் இதுவரை 4,691 பள்ளங்களை மூடி கான்கிரீட் கலவை மற்றும் தார்க்கலவை கொண்டு சீர்செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com