வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களுக்கு தீவிரமடைய வாய்ப்பு! - தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும் நிலையைப் பொறுத்து மழையின் தீவிரம் அமையலாம்.
வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களுக்கு தீவிரமடைய வாய்ப்பு! - தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
Published on: 

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களுக்கு தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:-

அடுத்த 3 நாட்களுக்கு மழை தீவிரம்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் அடுத்த 3 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும் நிலையைப் பொறுத்து மழையின் தீவிரம் அமையலாம். எனவே, அடுத்த சில நாட்களில் நிலவும் வானிலை மாற்றங்களைப் பொதுமக்கள் கவனித்து வருவது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com