சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com