உதவி பேராசிரியர்களுக்கான நெட் தகுதி தேர்வு; அறிவிப்பு வெளியீடு

நடப்பாண்டில் டிசம்பர் மாத ஸ்லெட் மற்றும் நெட் தேர்வு நடைபெற உள்ளது.

உதவி பேராசிரியர்களுக்கான நெட் தகுதி தேர்வு;  அறிவிப்பு வெளியீடு
Published on: 

சென்னை,

டிசம்பர் 19,22,27 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நெட் தகுதி தேர்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் “ஸ்லெட்” அல்லது “நெட்” தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஸ்லெட் தேர்வில் வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால், நெட் தேர்ச்சி பெறுவோர் தமிழகம் உள்பட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேரும் தகுதியைப் பெறுவார்கள். பி.எச்டி. பட்டம் பெற்றிருந்தால் நெட், ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை.

டிசம்பரில் தேர்வு

அந்த வகையில்,அறிவியல் பாடப்பிரிவு சார்ந்த உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு, சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் டிசம்பர் மாத ஸ்லெட் மற்றும் நெட் தேர்வு நடைபெற உள்ளது. டிசம்பர் 19,22,27 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் https://csirnet.nta.ac.in இணையதளத்தில். அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

3 துணைத் தேர்வுகள்

நெட் தேர்வை பொறுத்தவரை பொதுவாக 3 துணைத் தேர்வுகளை உள்ளடக்கியது ஆகும். மூன்று தேர்வுகளுமே கொள்குறி வகையில்தான் இருக்கும்.. முதல் தேர்வில் விண்ணப்பதாரரின் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தைச் சோதிக்கும் வகையில் 60 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் பிடித்தமான ஏதேனும் 50 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். 2-வது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 50 கேள்விகள் கேட்டிருப்பார்கள். 3-வது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 75 வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com