மதுராந்தகம்,தாராபுரம் 2 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்த நாதக, கம்யூனிஸ்டுகள்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்றுள்ளது.
டெபாசிட்டை இழந்த நாதக, கம்யூனிஸ்டுகள்
Published on: 

சென்னை,

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்), தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்), கரூர் (கரூர் மாவட்டம்), விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்), அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்), திருச்சி கிழக்கு (திருச்சி மாவட்டம்) ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன.

இதில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பொதுவாக, இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியை எடைபோடும் தேர்தல் என்பதால், 4 மாத கால த.வெ.க. ஆட்சி மக்களை திருப்திபடுத்தியதா?, அல்லது அதிருப்தியடையச் செய்ததா? என்ற கேள்விகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சியே வாகை சூடியிருக்கிறது. ஆட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்றாக கருதி அந்த வெற்றியை ஆளுங்கட்சியினர் கொண்டாடினார்கள்.

அதுபோன்ற நிலையே தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிரொலித்து இருக்கிறது.

சத்தியபாமா வெற்றி

தாராபுரம் இடைத் தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தவெக 66,841, திமுக 57,370, அதிமுக 42,280, நாம் தமிழர் 5,273, இந்திய கம்யூ , 1,151

மரகதம் குமரவேல் வெற்றி

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் 20,302 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 72,103 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 51,801 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 46,034 வாக்குகளும் பெற்றனர்.

தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

தாராபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் திமுக, அதிமுக முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன

தாராபுரத்தில் மொத்தம் 1,406 தபால் வாக்குகள் பதிவான நிலையில் அதிகபட்சமாக திமுகவுக்கு 613 வாக்குகள் கிடைத்தன. அதிமுகவுக்கு 406, தவெகவுக்கு 255, நாம் தமிழர் கட்சிக்கு 19, கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தபால் வாக்குகள் கிடைத்தன.

3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது அதிமுக

3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது அதிமுக தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி வாகை சூடி உள்ளது. பொதுத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் வென்ற அதிமுக இம்முறை 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

டெபாசிட் தக்கவைப்பு

மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதியிலும் டெபாசிட்டை தக்கவைத்து திமுக, அதிமுக

டெபாசிட் காலி

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com