தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை; 2021-ஐ விட பெரிய வித்தியாசம் இல்லை - சேகர் பாபு

வாக்கு சதவீதம் தேர்தல் முடிவுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை; 2021-ஐ விட பெரிய வித்தியாசம் இல்லை - சேகர் பாபு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு, தனது குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபுவிடம், தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் அதிகரித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சேகர் பாபு, “வாக்கு சதவீதம் தேர்தல் முடிவுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 2021 சட்டமன்ற தேர்தலை ஒப்பிட்டு பார்த்தால் 2026 தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com