ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பெரம்பலூரில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Published on

சென்னையில் கடந்த 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது மற்றும் ஓ.பன்னீர் செல்வம் நீக்கம் ஆகியவை செல்லாது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நேற்று அதிரடியாக தீர்ப்பு கூறினார். இதையடுத்து, பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் பாலமுருகன் தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com