நீடாமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

நீடாமங்கலம் நெல்கொள்முதல் நிலையத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளை காத்திருக்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
நீடாமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
Published on

ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நெல் கொள்முதல் மையங்களில் ஏதும் புகார்கள் வராத வண்ணமும், அதனை சரி செய்யும் நோக்கில் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை தலைவர் காமினி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தஞ்சை சரக குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் ஆகியோர் நீடாமங்கலம் நேரடி கொள்முதல் மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

காத்திருக்க வைக்க கூடாது

ஆய்வின் போது விவசாயிகளிடம் சரியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? நெல் கொள்முதல் செய்ய கையூட்டு ஏதேனும் கேட்கிறார்களா? என விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் ஏதேனும் முறைகேடு இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

நெல் கொள்முதல் மையங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் சரியான முறையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை காத்திருக்க வைக்க கூடாது, விவசாயிகளிடம் கையூட்டு பெறக்கூடாது. எந்த புகாரும் எழாத வண்ணம் பணிபுரிய வேண்டும். மீறினால் சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com