விவசாய மின் இணைப்பு பணிகளை மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

விவசாய மின் இணைப்பு பணிகளை மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாய மின் இணைப்பு பணிகளை மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
Published on

சென்னை,

மின் பகிர்மானக் கழக திட்டப் பிரிவு தலைமைப் பொறியாளர், அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

2024-2025-ம் ஆண்டுக்குள் 15,000 விவசாய மின் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 11,551 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் சாதாரண பிரிவில் 58 சதவீத இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தேனி, பல்லடம், தருமபுரி, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மேட்டூர், நாமக்கல் நாகப்பட்டினம், தெற்கு கோவை வட்டங்களில் மிகவும் மோசமான நிலையிலேயே (60 சதவீதத்துக்கும் குறைவு) இலக்கு எட்டப்பட்டுள்ளது. தட்கல் பிரிவில் 77 சதவீத இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

கோவை மெட்ரோ, நாமக்கல், கோபி, காஞ்சிபுரம், திண்டுக்கல் வட்டங்களில் செயல்பாடு மோசமாக உள்ளன. இவற்றை வேகப்படுத்த வேண்டும். அரசு திட்டங்களுக்கு கீழ் வரும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இப்பணிகளை மார்ச் 15-க்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com