எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி; ஒடிசாவில் இருந்து வல்லுநர் குழு இன்று வருகை

எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி; ஒடிசாவில் இருந்து வல்லுநர் குழு இன்று வருகை
Published on

சென்னை,

மிக்ஜம் புயல் மழையின்போது சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்தது. இந்த எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றைக் கடந்து கடலில் கலந்ததால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இந்த எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் எண்ணெய் கழிவை அகற்றும் பணி தொடர்பாக ஒடிசா மாநிலத்தில் இருந்து வல்லுநர் குழு இன்று சென்னை எண்ணூருக்கு வருகை தர உள்ளனர். ஏற்கனவே டிரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் ஐ.ஐ.டி. குழு எண்ணூரில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com