விஷ வண்டுகள் கடித்து மூதாட்டி சாவு

மதுக்கூர் அருகே விஷம் வண்டுகள் கடித்து மூதாட்டி உயிரிழந்தார். மேலும் அவரது மகன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
விஷ வண்டுகள் கடித்து மூதாட்டி சாவு
Published on

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே விஷம் வண்டுகள் கடித்து மூதாட்டி உயிரிழந்தார். மேலும் அவரது மகன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஷ வண்டுகள் கடித்தது

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வசித்து வருபவர் ராஜகோபால். இவருடைய மனைவி கமலா (வயது 67). இவர்களுடைய மகன் முத்துசாமி (47). இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னந்தோப்பில் கமலா வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் மூதாட்டி கமலாவை கடித்தது.

மூதாட்டி சாவு

அப்போது கமலா அலறல் சத்தம் கேட்டு முத்துசாமி, அங்கு சென்றார். அவரையும் விஷ வண்டுகள் கடித்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கமலா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மகன் முத்துசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com