வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.

வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் மெர்சி (வயது 74). இவர் நேற்று முன்தினம் கண்மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். இரவு 7.30 மணியளவில் மெர்சி புதுவசூர் பஸ்நிறுத்தம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் திடீரென அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com