பெண்ணை மிரட்டிய முதியவர் கைது

சேரன்மாதேவி அருகே பெண்ணை மிரட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை மிரட்டிய முதியவர் கைது
Published on

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியை அடுத்த கங்கணாங்குளம் அருகே உள்ள பிள்ளைகுளம், அந்தோணிநகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 65). இவர் நேற்று முன்தினம் தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பிரதீபா (26) என்பவரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனை பிரதீபாவும் அவரது கணவர் துரைசிங்கும் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், பிரதீபா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆயுதத்தால் தாக்கி சேதப்படுத்தி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதீபா சேரன்மாதேவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கவேலை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com