போக்சோவில் முதியவர் கைது

கூடலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
போக்சோவில் முதியவர் கைது
Published on

கூடலூர் அருகே உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 65). இவர், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறினார். அவர் லோயர்கேம்ப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன், மனோகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com