முதியவர் விஷம் குடித்து தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

நெல்லை அருகே சீவலப்பேரி மேலபாலாமடை அம்மன் கோவில் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 63). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com