முதியவர் விஷம் குடித்து தற்கொலை

சாயர்புரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்துரை (வயது 60). இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி மாலை வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பால்துரையின் மகள் பாலஜெயந்தி சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com