தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை

நெல்லை அருகே தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை
Published on

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே செங்குளம் ரெயில்வே கேட்டுக்கு அருகில் நேற்று முன்தினம் காலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் உடனடியாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com