மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

சாணார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

சாணார்பட்டி அருகே உள்ள பெத்தயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 60). கடந்த 4-ந்தேதி இவர், அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துபாண்டி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்தனர்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பழனி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com