மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த முதியவர் சாவு

மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த முதியவர் சாவு
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் பால்சாமி (வயது 81). இவர் மாட்டு வண்டியில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் இருந்து தண்ணீர் பிடித்து மாட்டு வண்டியில் வரும் பொழுது வண்டியில் இருந்த குறுக்கு கம்பு ஒடிந்து விழுந்தது. இதில் பால்சாமி தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com